"சிம்மக்குரலால் செந்தமிழ்ப்பேசி அன்னைத் தமிழுக்கு அழகு சேர்த்தவர்" - சீமான் புகழாரம்!!

 
sivaji

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 21வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

sivaji ganesan

இந்திய சினிமாவின் புகழ் பெற்ற திரை கலைஞராக வலம் வந்தவர் மறைந்த நடிகர் திலகம் செவிலியர் சிவாஜி கணேசன்.  1952 ஆம் ஆண்டு பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர் விதவிதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து திறம்பட நினைத்து தனக்கென தனி இடத்தை பிடித்தார்.  தமிழ் ,தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்துள்ள இவர் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த ஒரே நடிகர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார். 

sivaji


நல்ல குரல் வளம் ,தெளிவான உணர்ச்சிபூர்வமான தமிழ் உச்சரிப்பு ,சிறந்த நடிப்பு திறன் ஆகியவை இவரின் தனி சிறப்புகள் ஆகும் . நடிகர் திலகம் ,நடிப்புச் சக்கரவர்த்தி ,சிம்ம குரலோன் என மக்களால் அழைக்கப்பட்ட இவர் சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருதை வென்ற முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.  பத்மஸ்ரீ ,பத்மபூஷன் மற்றும் திரைப்பட துறையின் உயரிய விருதான தாதா சாகேப்  பால்கே விருது உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ள இவர்,  பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது பெற்ற முதல் இந்திய நடிகர். இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி தனது 72ஆவது வயதில் உயிரிழந்தார்.



இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தன்னிகரற்ற கலைத்திறனால் நாட்டுமக்களின்உள்ளத்திலும் இல்லத்திலும் ஒருசேர நிறைந்தவர்! சிம்மக்குரலால் செந்தமிழ்ப்பேசிஅன்னைத் தமிழுக்கு அழகு சேர்த்தவர்! வணங்கும் கடவுளையும், வரலாற்று நாயகர்களையும், விடுதலைப் போராட்ட வீரர்களையும் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியகலை உலகச் சிற்பி! தமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம்! நடிகர் திலகம் என எல்லோராலும் பெருமையோடு அழைக்கப்பட்ட நவரச நாயகன்!  நமது ஐயா நடிகர் திலகம் சிவாஜி கணேசன்அவர்களின் நினைவுநாள் இன்று (21-07-2022) அந்த மகத்தான மேதைக்கு பெருமையோடுநம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்! " என்று குறிப்பிட்டுள்ளார்.