திருவான்மியூரில் கோயில் கோபுரத்தை சுத்தம் செய்த சிவனடியார் தவறி விழுந்து பலி..

 
கோயில் கோபுரத்தில் இருந்து கீழே தவறி விழுந்த பக்தர் உயிரிழப்பு!


சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில், கோபுரத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தவறி விழுந்து சிவனடியார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள மருதீஸ்வரர் கோயிலில் உழவாரப் பணி எனப்படும் தூய்மை பணி நடைபெற்று வந்தது. சுமார் 30 பேர் இந்த சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிந்ததாக தெரிகிறது.  அவர்களில் கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த பழனி (44) என்பவர் கோயில் கோபுரத்தில் ஏறி சுத்தம் செய்து வந்திருக்கிறார்.  இந்நிலையில் நேற்று மாலை கோபுரத்தில் ஏறி சுத்தம் செய்துகொண்டிருந்தபோது திடீரென பழனி கால் தவறி கீழே விழுந்துள்ளார். 

கோயில் கோபுரத்தில் இருந்து கீழே தவறி விழுந்த பக்தர் உயிரிழப்பு!

தலையில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம்  ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பழனி உயிரிழந்தார்.  சிவனடியார் பழனியின் இறப்பு குறித்து திருவான்மியூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோயில் சுத்தம் செய்யும் பணியின் போது சிவனடியார் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.