"ஒரு வாரம் கழித்து தான் தெரியும்.." - தந்தை மரணத்தை வலியுடன் அறிவித்த நடிகை!!

 
rr

தமிழில் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷெரின். இதையடுத்து சில படங்களில் தோன்றிய அவர் பின்னர் சினிமா பக்கம் தலை காட்டவில்லை. பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷெரினுக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகியது. இதன்பிறகு அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார் .

sherin

ஷெரின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவரது தந்தை அவர்களது குடும்பத்தை விட்டு விலகி சென்றுள்ளார்.  இதனால் ஷெரின் தனது அப்பாவை இதுவரை நேரில் பார்த்தது இல்லை என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.  இந்த சூழலில் கடந்த வாரம் ஷெரினின் தந்தை உயிரிழந்துள்ளார்.

sherin

 இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில்,  நான் உங்களை நேசித்தேன்;  என் வாழ்நாள் முழுவதும் உங்கள் அன்பிற்காக நான் ஏங்கினேன். நீங்கள் ஒரு வாரத்திற்கு முன்பு இறந்து விட்டீர்கள் என்று இன்று தான் நான் அறிந்தேன். அது என் இதயத்தை இன்னும் உடைக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார் .

அத்துடன் தனது தந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டுள்ள அவர் , எனக்கு உங்களிடம் இருந்து எனக்கு கிடைத்தது இந்த படம் மட்டும் தான்.   இந்த படம் என்னிடம் எப்போதும் இருக்கும் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.