#BREAKING அதிரடி விலை உயர்வு! பெட்ரோலை விட டீசல் விலை அதிகமானது
Shell India நிறுவன பங்க்-களில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
நயாராவை தொடர்ந்து மற்றொரு தனியார் நிறுவனமான Shell India நிறுவனம் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.25.01, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.7.41 உயர்த்தி அறிவித்துள்ளது. இதன்மூலம் அந்நிறுவன பங்க்-களில் டீசல் லிட்டருக்கு ரூ.123.52ஆகவும், பெட்ரோல் ரூ.119.385 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் நடந்துவரும் போரின் விளைவால் விலை உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக நயாரா தனியார் நிறுவனத்தின் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5.30 வரையும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 வரையிலும் உயர்த்தியது. இதனையடுத்து நயாரா பெட்ரோல் பங்க்குகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று காலை முதல் ரூ.107.93க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் டீசல் லிட்டருக்கு ரூ.97.22க்கு விற்பனையாகி வருகிறது.

