ஜெ., சொத்தில் பங்கு! வாசுதேவன் வழக்கில் தீபா, தீபக்கிற்கு இறுதி வாய்ப்பு

 
ஜ்

மறைந்த முன்னாள்  முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் என்று சொல்லி வாசுதேவன் என்பவர் தனது சகோதரியின் சொத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என்று தொடர்ந்த வழக்கில் ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகள் தீபா,  தீபக் பதிலளிக்க இறுதி அவகாசம் வழங்கியிருக்கிறது நீதிமன்றம்.

வ

 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிப்பதற்காக நிர்வாகிகளை நியமிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது . இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதத்தில் வாரிசு உரிமைச் சட்டத்தின் படி ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் , மகள் தீபா ஆகியோர் ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று தீர்ப்பளித்தது.  இதன்பின்னர் போயஸ் கார்டன் இல்லத்தின் சொத்துக்கள் தீபா,  தீபக் இருவரிடமும் ஒப்படைக்கப்பட்டது.

 இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் மைசூர் வியாசரபுராவை சேர்ந்த வாசுதேவன் என்ற முதியவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பரப்பரப்பு மனு தாக்கல் செய்தார்.  தான் ஜெயலலிதாவின் சகோதரர் என்றும்,  ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனின் முதல் மனைவியின் மகன் என்றும்  கூறியிருந்தார்.   

ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனின் முதல் மனைவி ஜெயம்மாவின் மகன் தான் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். தனது தந்தை ஜெயராமன் வேதவல்லி என்ற வேதம்மாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.  இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர்கள் தான் ஜெயக்குமாரும்,  ஜெயலலிதாவும்.  ஜெயக்குமாரின் வாரிசுகள் தான் தீபா, தீபக் என்று தெரிவித்திருக்கிறார் . 

ஜ

கடந்த 1950 ஆம் ஆண்டில் ஜெயராமனிடம் ஜீவனாம்சம் கேட்டு மைசூர் நீதிமன்றத்தில் தனது தாய் தாக்கல் செய்திருந்த வழக்கில்,  ஜெயக்குமார்- ஜெயலலிதாவை பிரதி வாதியாக சேர்த்ததையும் அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார்.   இந்த வாரிசு உரிமைச் சட்டப்படி தனக்கும் ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு இருக்கிறது என்று கூறியிருக்கிறார் .  காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.

 இந்த மனு உயர் நீதிமன்ற நிர்வாக தேவைக்காக மாஸ்டர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  அப்போது இந்த மனு மீது தீபா- தீபத் இருவரும் பதிலளிக்க இரண்டு வார காலத்தை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.  இதனால் நீதிபதி கடந்த ஜனவரி 23ஆம் தேதியிலிருந்து பதில் அளிக்க காலதாமதம் செய்வது ஏன்? என்ற கேள்வியை எழுப்பி,   தீபா மற்றும் தீபக் சார்பில் பதில் அளிக்க அவகாசம் கூறியவை ஏற்காத நீதிபதி ,  பதில் அளிக்க கால அவகாசம் வழங்க முடியாது. இறுதி வாய்ப்பாக இரண்டு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்திருக்கிறார்.