மரச் சிற்பக் கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்த ’ஷரான் பிளை’

 
zs

தமிழகத்தின் ஐந்து தலை சிறந்த மரச் சிற்பக் கலைஞர்களுக்கு, "ஐ ஆம் ஸ்ட்ராங்கஸ்ட்" (I AM STRONGEST) விருதுகளை வழங்கியது, ஷரான் பிளை நிறுவனம். தொடர்ந்து ஏழாவது ஆண்டாக வழங்கப்பட்டு வரும்  இவ்விருது, இந்த ஆண்டு  தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வரும்  மரச்சிற்பக் கலைத் திறனையும், மாறிவரும் உலகிற்கு ஏற்ப புதுமை புனைவதையும் கொண்டாடும் வகையில், வழங்கப்பட்டது


ஷரான் பிளை (SharonPly) நிறுவனத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் "ஐ ஆம் ஸ்ட்ராங்கஸ்ட்" (I AM STRONGEST) விருதுகளின் ஏழாவது பதிப்பில், மரச் சிற்பக் கலைத் துறையைச் சேர்ந்த ஐந்து தலைசிறந்த தச்சுக் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். அவர்களின் சிறப்பான கைவினைத் திறன், அர்ப்பணிப்பு மற்றும் இந்தியாவின் வளமான மரச்சிற்பக் கலை பாரம்பரியங்களைப் பாதுகாப்பதில் அவர்கள் ஆற்றிய பங்களிப்பு ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. இந்த 2026-ஆம் ஆண்டுக்கான விருதுகள், பல தலைமுறைகளாக மரங்களைச் செதுக்குவதில் நிபுணத்துவம் பெற்று, அதே நேரம் புதுமையும் புனைந்து வரும் தச்சுக் கலைஞர்களின் வலிமையைக் கௌரவிக்கும் வகையில், “CARVED IN STRENGTH: Honouring Generations of Craftsmanship & Innovation” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு வழங்கப்பட்டது. நாட்டின் மிக நுணுக்கமான மரக் கலைப் படைப்புகளுக்குப் பின்னால் இருக்கும் கலைஞர்கள் இதில் கௌரவிக்கப்பட்டனர். கோவில் தேர்கள் மற்றும் புனிதச் சிற்பங்கள் முதல் பிரம்மாண்டமான கதவுகள் மற்றும் கட்டிடக்கலை சார்ந்த மரவேலைப்பாடுகள் வரை, விருது பெற்ற கலைஞர்கள் தலைமுறை தலைமுறையாகப் பரிமாறப்பட்ட அறிவு, திறமை மற்றும் விடாமுயற்சியின் பிரதிநிதிகளாக விளங்குகின்றனர். இவர்களின் பங்களிப்பு பாரம்பரிய கைவினைக் கலையை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

இந்த ஆண்டின் ஐந்து விருதாளர்கள் பெருந்தச்சர் அப்பர் இலட்சுமணன், டாக்டர் ஆர். ரங்காச்சாரி ஸ்தபதி, திரு. எஸ். மாசானம் ஆச்சாரி, திரு. எஸ். திருநாவுக்கரசு ஸ்தபதி மற்றும் திரு. குமாரசாமி ரமேஷ் ஸ்தபதி ஆகியோர் ஆவர். இவர்களின் பணிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் உள்ள கோவில்கள் மற்றும் பாரம்பரியத் திட்டங்களில் இடம்பெற்றுள்ளன. மேலும், கைவினைத் திறனைத் தாண்டி, பயிற்சி அளித்தல், அறிவைப் பகிர்தல் மற்றும் கைவினைக் கலைஞர்களின் சமூகத்திற்கு ஆதரவளித்தல் போன்ற பணிகளிலும் அவர்கள் தொடர்ந்து பங்களித்து வருகின்றனர்.

பெருந்தச்சர் அப்பர் இலட்சுமணன்

பாரம்பரிய தச்சுக் கலையில் புதுமையான அணுகுமுறையை அறிமுகப்படுத்தியதற்காக பெருந்தச்சர் அப்பர் இலட்சுமணன் கௌரவிக்கப்பட்டார். மரத்தால் உருவாக்கப்பட்ட தனித்துவமான கார், மோட்டார் சைக்கிள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட அவரது படைப்புகள் குறிப்பிடத்தக்கவை. திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த தலைசிறந்த தச்சரான இவர், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோவில் தேர்களை உருவாக்கியுள்ளார். அவற்றில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள தமிழ்த் தேர் குறிப்பிடத்தக்கது.

2011–2012ஆம் ஆண்டிற்கான பூம்புகார் மாநில விருதிணைப் பெற்றுள்ள இவர், தச்சுக் கலை தொடர்பாக பத்து நூல்களையும் எழுதியுள்ளார். மேலும், மரச்சிற்பக் கலையில் மாணவர்களுக்கு பயிற்சியும் அளித்து வருகிறார்.

டாக்டர் ஆர். ரங்காச்சாரி ஸ்தபதி

13 தலைமுறைகளாகத் தொடரும் கோவில் தேர் உருவாக்கம் மற்றும் பாரம்பரிய மரச்சிற்பக் கலையை முன்னெடுத்து வருவதற்காக டாக்டர் ஆர். ரங்காச்சாரி ஸ்தபதி கௌரவிக்கப்பட்டார். ரங்காச்சாரி ட்ரடிஷனல் வுட் ஸ்கல்ப்ச்சர்ஸ் (Rangachari Traditional Wood Sculptures) நிறுவனத்தின் மூலம், தமிழ்நாட்டின் பாரம்பரிய கைவினைக் கலையை அடிப்படையாகக் கொண்ட - கையால் செதுக்கப்பட்ட சிற்பங்கள், அலங்கார வேலைப்பாடுகள் மற்றும் கட்டிடக்கலை சார்ந்த மரவேலைப்பாடுகளை உருவாக்கி வருகிறார்.

பாரம்பரிய சிற்பக் கலையின் நுணுக்கமான வேலைப்பாடுகளை வெளிப்படுத்துவதுடன், இந்த அறிவையும் திறமையையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் அவரது அர்ப்பணிப்பையும் அவரது பணிகள் பிரதிபலிக்கின்றன.

திரு. எஸ். மாசானம் ஆச்சாரி

பாரம்பரிய கைக்கருவிகளைப் பயன்படுத்தி பெரிய அளவிலான மரச் சிற்பங்களை உருவாக்கும் திறமைக்காக திரு. எஸ். மாசானம் ஆசாரி கௌரவிக்கப்பட்டார். மதுரையைச் சேர்ந்த இவர், சுமார் 55 ஆண்டுகளாகத் தொடரும் குடும்ப மரச் சிற்பக் கலை பாரம்பரியத்தை முன்னெடுத்து வருகிறார்.

தனது சகோதரர்களுடன் இணைந்து தெய்வச் சிலைகள், செட்டிநாடு பாணி கதவுகள் மற்றும் பூஜை மண்டபங்களை உருவாக்கி வருகிறார். இவரது குடும்பப் பட்டறை, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் வெள்ளி அம்பலம் மண்டபத்திற்கான மரக் கட்டமைப்புக் கூறுகளை உருவாக்கியதுடன், மலேசியாவிலும் செதுக்கப்பட்ட தூண்கள் மற்றும் தெய்வச் சிற்பங்களை வழங்கியுள்ளது.

திரு. எஸ். திருநாவுக்கரசு ஸ்தபதி

கோவில் வாகனங்கள் மற்றும் ஊர்வலங்களுடன் தொடர்புடைய நுணுக்கமான சிற்பக் கலை மரபுகளைப் பாதுகாப்பதில் ஆற்றிய விரிவான பங்களிப்புக்காக திரு. எஸ். திருநாவுக்கரசு ஸ்தபதி கௌரவிக்கப்பட்டார்.

மாமல்லபுரத்தில் உள்ள அரசினர் சிற்பக்கலை மற்றும் கட்டிடக்கலைக் கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், ஆண்டிப்பந்தலில் உள்ள மரபு (MARABU) அமைப்பின் மூலம் தனது பாரம்பரிய கைவினைப் பணியைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்.

கோவிந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ பாண்டுரங்க–ருக்மிணி கோயிலுக்காக 62 அடி உயர தேரை உருவாக்கியது மற்றும் நாகப்பட்டினத்தில் அத்தி மரத்தால் செதுக்கப்பட்ட 32 அடி உயர அத்தி விநாயகர் சிலை ஆகியவை இவரது முக்கியப் படைப்புகளில் அடங்கும்.

திரு. குமாரசாமி ரமேஷ் ஸ்தபதி

கைவினைத் திறனுடன், சக கைவினைக் கலைஞர்களின் நலனில் கொண்டுள்ள அக்கறைக்காக திரு. குமாரசாமி ரமேஷ் ஸ்தபதி கௌரவிக்கப்பட்டார்.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், பாரம்பரிய மரக்கலை மற்றும் பெரிய அளவிலான கோவில் மரக் கட்டமைப்புப் பணிகளில் சிறப்பு பெற்ற மானசா வுட் கிரியேஷன்ஸ் (Manasa Wood Creations) நிறுவனத்தை வழிநடத்தி வருகிறார்.

இவரது முக்கியப் பணிகளில், அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலுக்காக  உருவாக்கப்பட்ட 90க்கும் மேற்பட்ட  கதவுகள் குறிப்பிடத்தக்கவை. இந்தக் கதவுகள் நவம்பர் 2025-ல் ஒப்படைக்கப்பட்டன. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கோவில் திட்டங்களிலும் இவர் பங்களித்துள்ளார்.

ஷரான் பிளை நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. விஷ்ணு கெமானி (Mr Vishnu Khemani) கூறுகையில், “ஒரு நிறைவான படைப்பு என்பது திறமையை மட்டுமல்ல, பல ஆண்டுகளாகப் பெறப்பட்ட கற்றல், ஒழுக்கம் மற்றும் அனுபவத்தையும் பிரதிபலிக்கிறது. இந்த ஆண்டின் "ஐ ஆம் ஸ்ட்ராங்கஸ்ட்" விருதுகள் மூலம், படைப்பாளியை மையப்படுத்தி, பாரம்பரிய அறிவைப் பாதுகாத்து, அதே நேரத்தில் சமகாலத் தேவைகளுக்கு ஏற்ப தங்களது திறமைகளை வளர்த்துக் கொண்டிருக்கும் கைவினைக் கலைஞர்களைக் கௌரவிக்கிறோம்.

கார்வ்ட் இன் ஸ்ட்ரென்த் (CARVED IN STRENGTH) என்பது மரத்துடனான ஷரான் பிளை-யின் நீண்டகாலத் தொடர்பையும், மரத்தைப் பயனுள்ள, கட்டிடக்கலை மற்றும் கலாச்சாரப் படைப்புகளாக மாற்றும் கைவினைத் திறனுக்கான எங்களது மரியாதையையும் பிரதிபலிக்கிறது. இந்த மரச் சிற்பக் கலைத் துறையின் தலைசிறந்த கலைஞர்களைக் கௌரவிப்பதன் மூலம், திறமையான கைவினைத் திறனுக்கு சமூகத்தில் அதிக அங்கீகாரத்தை உருவாக்கவும், தலைமுறை தலைமுறையாக அறிவு பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும் நாங்கள் விரும்புகிறோம். "ஐ ஆம் ஸ்ட்ராங்கஸ்ட்"   தொடர்ந்து மற்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளைச் செய்தவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது.”

"ஐ ஆம் ஸ்ட்ராங்கஸ்ட்": ஒவ்வொரு வடிவத்திலும் வலிமையைக் கொண்டாடுதல்:

2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஷரான் பிளை "ஐ ஆம் ஸ்ட்ராங்கஸ்ட்" விருதுகள், வலிமை, விடாமுயற்சி மற்றும் சமூக சேவையை வெளிப்படுத்தும் செயல்பாடுகளைக் கொண்ட நபர்களைக் கௌரவித்து வருகிறது. முதல் பதிப்பில் சக்கர நாற்காலி கூடைப்பந்து வீராங்கனை மாலதி மற்றும் சமூக மாற்றத்திற்காகப் பாடுபட்ட லோகம்மாள் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

2020-ஆம் ஆண்டில், கோவிட்-19 (COVID-19) பெருந்தொற்றின்போது உயிரிழந்த முன்னணிப் பணியாளர்களுக்கு விருதுகள் மூலம் அஞ்சலி செலுத்தப்பட்டது. 2021-ஆம் ஆண்டு பதிப்பில், பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் போது சமூகங்களுக்கு ஆதரவளித்த அன்றாட வாழ்க்கையின் நாயகர்கள் கௌரவிக்கப்பட்டனர். இந்த இரண்டு பதிப்புகளும் ஆன்லைனில் நடைபெற்றன.

2022-ஆம் ஆண்டில், இந்த விருது தளம் விலங்குகள் நலனில் கவனம் செலுத்தியது. பறவைகள், யானைகள் மற்றும் பிற விலங்குகளுக்காகப் பணியாற்றிய நபர்களின் பங்களிப்புகள் அங்கீகரிக்கப்பட்டன.

2024-ஆம் ஆண்டு பதிப்பில் தமிழ்நாட்டின் ஒலிம்பிக் ஹாக்கி ஜாம்பவான்கள் கௌரவிக்கப்பட்டனர். 2025-ஆம் ஆண்டு பதிப்பில், ஓய்வு பெற்ற மூத்த ராணுவ அதிகாரிகள், பாதுகாப்புத் துறை ஆய்வாளர்களாக பொதுமக்களின் புரிதலை மேம்படுத்தி தொடர்ந்து ஆற்றிவரும் பங்களிப்புகளுக்காக கௌரவிக்கப்பட்டனர்.

ஒவ்வொரு பதிப்பிலும், "ஐ ஆம் ஸ்ட்ராங்கஸ்ட்" பல்வேறு வடிவங்களில் வெளிப்படும் வலிமையை சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு வர முயன்று வருகிறது. 2026-ஆம் ஆண்டில், அவர்கள் உருவாக்கிய அற்புதமான படைப்புகளைப் போல அதிகம் அறியப்படாத கைவினைக் கலைஞர்களின் மீது கவனம் திரும்பியது. தலைமுறை தலைமுறையாகத் தொடரும் கைவினைத் திறனுக்குப் பின்னால் உள்ள திறமை, அனுபவம் மற்றும் அர்ப்பணிப்பு இந்த ஆண்டு கௌரவிக்கப்பட்டது.

ஷரான் பிளை பற்றி:

1987ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஷரான் பிளை (SharonPly), ஓட்டுப்பலகை (பிளைவுட்), அலங்கார வெனீர்கள், கதவுகள் மற்றும் இதர தொடர்புடைய தயாரிப்புகளை வழங்கி வருகிறது. இதன் உற்பத்தி ஆலை சென்னைக்கு அருகிலுள்ள கும்மிடிப்பூண்டியில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய ஓட்டுப்பலகை (பிளைவுட்) உற்பத்தி ஆலைகளில் ஒன்றாகும்.

மரத்துடனான நிறுவனத்தின் நீண்டகாலத் தொடர்பு காரணமாக, 2026-ஆம் ஆண்டின் "ஐ ஆம் ஸ்ட்ராங்கஸ்ட்" விருதுகள் சிறப்பான முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. மரத்தைத் தயாரிப்புகள், கட்டமைப்புகள் மற்றும் கலாச்சாரப் படைப்புகளாக மாற்றும் மனிதர்களின் திறமை, அறிவு மற்றும் அர்ப்பணிப்பை இந்தப் பதிப்பு கௌரவிக்கிறது.