சரத் யாதவ் மறைவு - முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

 
stalin

ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் சரத் யாதவ் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

tn

 

முன்னாள் மத்திய அமைச்சரும்,  ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 75.  சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சரத் யாதவ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  சரத் யாதவ்  மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

nullஇந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான திரு. சரத் யாதவ் அவர்களின் மறைவால் மிகவும் வேதனையடைந்தேன். சோசலிச இயக்கத்தின் மிக உயரிய தலைவராக விளங்கிய திரு. சரத் யாதவ் அவர்கள் தமது இறுதி மூச்சு வரையிலும் மக்களாட்சி மற்றும் மதச்சார்பின்மைக் கொள்கைகளில் ஆழ்ந்த பற்றுகொண்டவராய்த் திகழ்ந்தவர் ஆவார். அன்னாரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.