சபாஷ் சரியான போட்டி : ரோஜாவுடன் போட்டி போட அனுஷ்கா முடிவு..? அதிரும் அரசியல் களம்!

 
1

ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் நிலையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, பாஜக மற்றும் பவன் கல்யாண் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள நகரி என்ற தொகுதியில் நடிகை ரோஜா கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அதன் பின் அமைச்சர் ஆனார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் நடிகை ரோஜா மீண்டும் நகரி தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அங்கு ரோஜாவை எதிர்த்து தெலுங்கு தேசம் கூட்டணி சார்பில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி வேட்பாளராக நடிகை அனுஷ்கா களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்து ஜனசேனா கட்சியினரும் அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விரைவில் அவர் முழு நேர அரசியல்வாதியாக மாறுவார் எனத் தகவல்கள் பரவி வருகின்றன.

ஆனால், அனுஷ்கா தனது அரசியல் வருகை குறித்து இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.