அணையப்போற விளக்கு பிரகாசமாக எரிகிறது... நன்றாகவே தெரிகிறது முதல்வரே- எஸ்.ஜி.சூர்யா
அணையப்போற விளக்கு பிரகாசமாக எரிவது நன்றாகவே தெரிகிறது முதல்வரே என பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எஸ்.ஜி.சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த மதுபானக்கடைகள் குறித்த விவரங்களை தொலைக்காட்சி செய்திகளின் மூலமாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற காரணத்திற்காகவே நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்கா செய்தியாளராக பணியாற்றிவரும் திரு.நேசபிரபு அவர்கள் அடையாளம் தெரியாத கும்பல் அரிவாளால் வெட்டி கொலைவெறி தாக்குதல் நடத்தியிருக்கும் சம்பவம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு செயல்படும் அவலத்தை எடுத்துக்காட்டியுள்ளது.
இந்த செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருப்பது வேதனையிலும் உச்சம், இன்னும் தமிழகத்தின் முதல்வர் நாம்தான் என்ற ஞாபகம் இல்லாமல் எதிர்கட்சி தலைவர்போல் கண்டனம் தெரிவிப்பது தமிழக முதல்வர் எந்த லட்சணத்தில் தமிழகத்தை ஆட்சி செய்கிறார் என அப்பட்டமாக காட்டியுள்ளது. எதிலும் செயல்படாத முதல்வர் மக்கள் நேரடியாக சம்மந்தபட்ட சட்டம் ஒழுங்கு. துறையை தன்னைப்போலவே செயல்படாமல் வைத்துள்ளார். மத்திய அரசை எதிர்ப்பது, பிரிவினை அரசியலை வளர்த்தெடுப்பது என அரசியல் செய்கிறேன் என்ற பெயரில் தமிழக மக்கள் நலனை பார்க்காமல் ஆட்சி செய்வது உதயசரியனின் அஸ்தமனத்தை காட்டுகிறது... அணையப்போற விளக்கு பிரகாசமாக எரிகிறது நன்றாகவே தெரிகிறது. முதல்வரே...” எனக் குறிப்பிட்டுள்ளார்.