தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் 50 விழுக்காடு அதிகரிப்பு: மகளிர் ஆணையத் தலைவர்..!

 
1 1

கோயம்புத்தூரில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணை மருத்துவமனையில் காணச் சென்ற தமிழ்நாட்டின் மகளிருக்கான மாநில ஆணையாளர் ஏ.எஸ். குமாரி, செய்தியாளர்களிடம் பின்னர் பேசியபோது அவ்வாறு கூறினார்.

இருந்தபோதும், புகார்களின் எண்ணிக்கை, குற்றங்களின் எண்ணிக்கையால் மட்டும் உயரவில்லை எனத் திருவாட்டி குமாரி தெளிவுபடுத்தினார். பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள், மூடி மறைக்க மறுத்து தைரியமாக தங்களுக்கு ஏற்பட்டதைச் சொல்ல முன்வருவதும் எண்ணிக்கை உயர்வுக்கு ஒரு காரணம் என அவர் கூறினார்.

“பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என நினைக்கின்றனர். அதனால் புகார் மனுக்கள் அதிகரித்துள்ளன,” என்று திருவாட்டி குமரி தெரிவித்தார்.

கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு அருகே தனிமையான இடத்தில் இருந்த பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது ஆண் நண்பரையும் காண்பதற்குத் திருவாட்டி குமாரி, செவ்வாய்க்கிழமை (நவம்பர் 4) தனியார் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினார். அந்த விசாரணை தொடர்பில் விரிவான அறிக்கை ஒன்றைத் தயாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

காவல்துறை விசாரணைக்குக் கெடுபிடியான காலக்கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு மாதத்திற்குள் விசாரணை நிறைவடையவேண்டும் என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகத் கூறினார்.