ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை- ஒருவர் கைது

 
ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை- ஒருவர் கைது

கேரளாவில் இருந்து சென்னை வந்த விரைவு ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.


கடந்த 26ஆம் தேதி, பாலக்காட்டில் இருந்து கரூர் வழியாக சென்னை வந்த பழனி எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது யாரும் இல்லாத நேரத்தில் ஐடி பெண் ஊழியரை இளைஞர் ஒருவர், கழிப்பறைக்குள் தள்ளி பாலியல் தொல்லைக் கொடுத்து அத்துமீறியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். இதையடுத்து இளைஞரை பிடிக்க 4 டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. 

இந்நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட கிஷோர் என்பவர் மாமல்லபுரத்தில் கைது செய்யப்பட்டார். கிஷோரின் சொந்த ஊர் குமாரபாளையம் என்பது தெரியவந்துள்ளது. இவர் சென்னையில் பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார். முன்னதாக இளைஞரின் புகைப்படத்தை வெளியிட்டு அவரைப் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு சன்மானம் அளிக்கப்படும் என ரயில்வே காவல்துறை அறிவித்திருந்தது குறிப்பிடதக்கது.