#BREAKING பெண் காவலருக்கு பாலியல் தொல்லை- எஸ்பி பணி நீக்கம்

 
as

புதுச்சேரியில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் எஸ்.பி. பணிநீக்கம்  செய்யப்பட்டுள்ளார். 


காரைக்காலில் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளராக சுப்பிரமணியன் பணியாற்றியபோது, அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான விசாரணை உறுதிப்படுத்தப்பட்டும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே மன உளைச்சலுக்கு ஆளான பெண் காவலர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் பெண் காவலரின் தாயார் ராசாம்பாள், தனது மகளுக்கு நீதி கிடைக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு விசாரணையின்போது தலைமைச் செயலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது; இதைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 24-ம் தேதி சுப்பிரமணியனை பணியிடை நீக்கம் செய்து காவல்துறை தலைமை உத்தரவிட்டது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பணி ஓய்வு பெற இருந்த சுப்பிரமணியன் மீது தற்போது துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு, இறுதி நடவடிக்கையாக தலைமை செயலர் சரத்சவுகான், புதுச்சேரி எஸ்பி சுப்பிரமணியன பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பிய்த்துள்ளார்.