6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!!

 
tn

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே பெரியநரிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்தவர் முருகன்.  62 வயதான இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரலில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு படித்த ஆறு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.  

இது தொடர்பாக அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் முருகனை கைது செய்தனர்.  அத்துடன் முருகன் ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வழக்கானது சிவகங்கை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

arrest

 இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரத்ராஜ் குற்றம் நிரூபிக்கப்பட்ட முருகனுக்கு இரட்டை ஆயுள்  தண்டனையும் , சில பிரிவுகளில் தலா ஐந்து ஆண்டுகள் வீதம் 45 ஆண்டுகள் சிறை, ஒரு பிரிவில் இரண்டு ஆண்டுகள் சிறையும்,  ரூபாய் 69 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.  அத்துடன்  தண்டனையை ஏகோபித்த காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஒரு சிறுமிக்கு ரூபாய் 7 லட்சம்,  மற்றொரு சிறுமிக்கு ஆறு லட்சம் , மேலும் நான்கு சிறுமிகளுக்கு நான்கு லட்சம் விதம் மொத்தம் 29 லட்சம் இழப்பீடாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளார்.