ஜனநாயகன் படத்தால் வெளிவந்த பாலியல் அத்துமீறல்- சிறுமியின் அதிர்ச்சி வாக்குமூலம்
"ஜனநாயகன்" திரைப்படத்தை பார்த்த 8 வயது சிறுமி, தனக்கு நடந்த பாலியல் அத்துமீறலை தந்தையிடம் கூறியதை அடுத்து சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
"ஜனநாயகன்" திரைப்படத்தை பார்த்த 8 வயது சிறுமி, தனக்கு நடந்த பாலியல் அத்துமீறலை தந்தையிடம் கூறியதை அடுத்து சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார். சிறுமியின் தாயும், தந்தையும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் நிலையில், சிறுமியின் தாய் கோடம்பாக்கத்தில் உள்ள பெரியன் என்பவரின் வீட்டில் தங்கி வீட்டு வேலை செய்து வருகிறார். அவ்வப்போது தந்தையைப் பார்க்கச் செல்லும் சிறுமி, கடந்த 30ஆம் தேதி அவருடன் ஜனநாயகன் படத்துக்குச் சென்றுள்ளார். அதில் குழந்தைகளிடம் குட் டச், பேட் டச் என்றால் என்ன? அப்படி நடந்தால் உடனடியாக பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டும் என ஹீரோ கூறுவதை கவனித்துள்ளார். படத்தில் சொல்வது போல் தாய் வேலை செய்யும் இடத்தின் உரிமையாளர் பெரியன் தன்னிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக தந்தையிடம் சிறுமி கூறியுள்ளார். உடனடியாக சிறுமியின் தந்தை இது குறித்து வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் பெரியனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

