பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை வழக்கு- ராஜேஷ்தாஸ் மேல் முறையீடு வழக்கில் நாளை தீர்ப்பு

 
rajesh doss

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் க்கு பெண் ஐபிஎஸ் பாலியல் தொந்தர கொடுத்த வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த் மேல்முறையீடு மனு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் 2021 ஆம் ஆண்டு பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலயல் தொந்தரவு கொடுத்ததாக அப்போதைய சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக அப்போதைய செங்கல்பட்டு எஸ் பி கண்ணன் இருவர் மீது விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி போலிசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை முடிந்து விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பராணி கடந்த ஜீன் 6 ஆம் தேதி தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில் குற்றச்சாட்டுப்பட்ட ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.20500, அபராதமும், கண்ணனுக்கு ரூபாய் 500 மட்டும் அபராதம் விதித்து தீர்ப்பளித்tu இருந்தார்.

இந்நிலையில் தான் இந்த தீர்ப்பு எதிர்த்து ராஜேஷ்தாஸ் மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் தனித்தனியாக விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி பூர்ணிமா முன்னிலையில்  மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தனர். மேல்முறையீட்டு மனு கடந்த 6 மாதமாக விசாரணை நடைபெற்ற வரும் நிலையில் இந்த நீதிமன்றத்தில் நடைபெற்றால் எங்களுக்கு நீதி கிடைக்காது வேறு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று ராஜேஷ்தாஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனை தொடர்ந்து மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மனுவை தள்ளுபடி செய்து வரும் ஜனவரி 24ஆம் தேதிக்குள் விழுப்புரம் நீதிமன்றமே விசாரணை முடித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில் இன்று வழக்கு விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது வழக்கு விசாரணையை நாளை ஒத்தி வைத்தார் நீதிபதி பூர்ணிமா.

ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் நாளைக்குள் (24ஆம் தேதிக்குள்) வழக்கை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதனால் நாளை தீர்ப்பு அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.