பாலியல் வன்கொமை- மாணவர்கள் போராட்டம் வாபஸ்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக மாணவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் தனது காதலனுடன் மறைவான இடத்தில் நின்று பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர் மாணவியின் காதலனை அடித்து துரத்திவிட்டு மாணவியிடம் தவறாக நடந்ததோடு அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அண்ணா பல்கலக்கழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக மாணவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்ட விவகாரத்தில் பதிவாளர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மாணவிக்கு நீதி வழங்ககோரி மாணவர் மற்றும் மாதர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்திவந்த நிலையில் தற்காலிகமாக வாபஸ் செய்யப்பட்டுள்ளது.