நாகர்கோவில் பெண் பாலியல் கொலை- டிஜிபியிடம் அறிக்கை கேட்டது தேசிய மகளிர் ஆணையம்

 
s

நாகர்கோவில் பெண் பாலியல் கொலை  வழக்கு தொடர்பாக தமிழக டிஜிபியிடம் தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை கேட்டது. 

​நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில், 50 வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ​இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, குற்றவாளியை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் நாகர்கோவில் பெண் பாலியல் கொலை  வழக்கு தொடர்பாக தேசிய மகளிர் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இதனையடுத்து 7 நாட்களுக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக டிஜிபியிடம் தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யவும், ரயில் நிலையங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.