பாலியல் துன்புறுத்தல் புகார் குறித்த வீடியோ வெளியானது... தவெக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

 
s

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பிரகாசம் மீது தவெக மகளிர் அணியைச் சேர்ந்த பெண் அளித்த பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு தொடர்பான திருமண வரவேற்பு  வீடியோ வெளியானது.


திருவள்ளுர் மாவட்டம் திருவூர் பகுதியைச் சேர்ந்த  தவெக பெண் நிர்வாகி ஒருவர் நேற்றைய தினம் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பூந்தமல்லி தவெக வேட்பாளர் குட்டி என்ற பிரகாசம் மீது பாலியல் சீண்டல்  புகார் ஆனது அளித்திருந்தார். அந்த புகாரில் கடந்த ஆண்டு ஜூன் 8-ம் தேதி  திருவள்ளூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகி ஒருவர்   திருமண வரவேற்பு விழாவில்  பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்றதாகவும், அப்போது திருவள்ளூர் தவெக தெற்கு மாவட்ட செயலாளரும் பூந்தமல்லி வேட்பாளருமான குட்டி என்ற பிரகாசம் தன்னிடம் மேடையில் பாலியல் சீண்டல்  அளித்ததாகவும் அது குறித்து கணவருடன் சென்று கேட்டபோது குடும்பத்தை கூலிப்படை வைத்து கொன்று விடுவேன் என அவர் மிரட்டியதாகவும் தெரிவித்திருந்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கட்சித் தலைமைக்கு புகார் அளித்தும் அவர் மீது  நடவடிக்கை எடுப்பதாக கூறி எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவரை பூந்தமல்லி வேட்பாளராக விஜய் அறிவித்திருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் தன் கணவருடன் வருகை தந்து நேற்று திருவள்ளுர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்   புகார் ஆனது அளித்திருந்தார்.


அவர் புகார் அடிப்படையில் திருவள்ளூர் டவுன் போலீசார் குட்டி என்ற பிரகாசம் மீது ஆபாசமாக பேசுதல், பாலியல் துன்புறுத்தல், மிரட்டல் உள்ள 6  பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில்  தவெக  பெண் நிர்வாகி பாலியல் சீண்டல்  குற்றச்சாட்டு முன் வைத்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் வீடியோ வெளியாகியுள்ளது.