மாணவிகளை வைத்து பாலியல் தொழில்- முக்கிய ஏஜெண்ட் கைது

 
ஏஜெண்ட்

சென்னையில் பள்ளி மாணவிகளை வைத்து பாலியல் தொழில் செய்த வழக்கில் முக்கிய ஏஜெண்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை, தி.நகர், தாமஸ்சாலையைச் சேர்ந்த பெண் நதியா (37), அவரது சகோதரி சுமதி (43), சகோதரியின் இரண்டாவது கணவர் ராமச்சந்திரன் (42), இதே பகுதியைச் சேர்ந்த மாயா ஒலி (29) உள்ளிட்ட கும்பல், பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவிகளை குறி வைத்து ஏமாற்றி, மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த இரண்டாண்டுகளாக இந்த கும்பல் பல ஏழை, எளிய பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தியது தெரியவந்துள்ளது. நதியா ஏற்கனவே சட்டவிரோதமாக பாலியல் வணிகத்தில் ஈடுபட்டவர் எனவும்,  தேனாம்பேட்டை பகுதியில் கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்து வந்தவர் எனவும் தெரிகிறது. இவர் தனது சகோதரி மற்றும் பள்ளி மாணவியான அவரது மகளையும்  பாலியல் வணிகத்தில் ஈடுபடுத்தியுள்ளார். அத்துடன் தன் மகள் மூலம் அவருடன் பள்ளியில் படிக்கும் ஏழ்மையான மாணவிகளை வீட்டிற்கு அழைத்து வந்து அச்சுறுத்தி பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தியுள்ளார். 

இந்நிலையில் சென்னையில் பள்ளி மாணவிகளை வைத்து பாலியல் தொழில் செய்த வழக்கில் முக்கிய ஏஜெண்ட் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை இந்த வழக்கில் கருக்கா வினோத் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய ஏஜெண்ட்டாக இருந்த விஜயலட்சுமி என்பவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய விஜயலட்சுமியை சிறையில் அடைக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.