#BREAKING தீவிர புயலானது அர்னாப்

 
s

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ‘அர்னாப்’ புயலானது தீவிரப் புயலாக வலுப்பெற்றதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மத்திய கிழக்கு, அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ‘அர்னாப்’ புயலானது தீவிரப் புயலாக வலுப்பெற்றதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அடுத்த 18 மணி நேரத்தில் மிக தீவிரப் புயலாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்துக்கு 490 கி.மீ தென் கிழக்கில் நிலவும் புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மறுதினம் மிகத் தீவிர புயலாக ஏனாம் அருகே கரையைக் கடக்கும் என கணிகக்கப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 160 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசும் எனவும்ம் அதீத கணமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.