முதலமைச்சருக்கு புதிய அலுவலகம் அமைப்பது தண்டச் செலவு- சிபிஐ விமர்சனம்

 
s

முதலமைச்சரின் அலுவலகம் தலைமைச் செயலகம் 10-வது மாடிக்கு மாறுகிறதாம். மேலும், துணை நகரமாக புதிய தலைமைச் செயலகம் உருவெடுக்கிறதாம். இதற்கெல்லாம் திட்டமதிப்பீடு எவ்வளவு? பற்றாக்குறை நிதி நிலையில் இவை எல்லாம் தேவைதானா?  என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் கூறுகையில், “முதல்வரின் அலுவலகம், தலைமைச் செயலகம் 10வது மாடிக்கு மாறுகிறதாம். மேலும், துணை நகரமாக புதிய தலைமைச் செயலகம் உருவெடுக்கிறதாம். இதற்கெல்லாம் திட்ட மதிப்பீடு எவ்வளவு? பற்றாக்குறை நிதி நிலையில் இவை எல்லாம் தேவைதானா? நிதி வருவாயை அதிகரிக்க திட்டமிட வேண்டிய நிர்ப்பந்தம் உள்ள நிலையில், இந்தச் செலவு நடவடிக்கைகள் தவிர்க்க முடியாத அவசியமா? அல்லது தண்டச் செலவுதானா?

செலவுகளைக் குறைத்து வருவாயை அதிகரிக்கத் திட்டமிட வேண்டிய மாநில அரசு, அவசியமற்ற செலவுகளை அதிகரிப்பதிலா குதிரை வேகம் காட்டுவது? இடிப்பாரை இல்லாத மன்னனாகப் பயணிப்பது ஆபத்து! கடிவாளம் இல்லாத குதிரைப் பயணம் பாதுகாப்பற்றது” என விமர்சித்துள்ளார்.