ஆமைகளின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு மையம் அமைக்க ₹6.30 கோடி நிதி ஒதுக்கீடு!

 
govt

சென்னையில் ரூ. 6.30 கோடி மதிப்பில் முதல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

tn
ஆமைகளில்  மொத்தம் 356 இனங்கள் அறியப்பட்டுள்ளன. ஆமைகள் குளிர் இரத்த விலங்குகளாகும். அதாவது இவற்றின் உடல் வெப்பநிலையை சூழலுக்கு ஏற்ப இவற்றால் மாற்றிக்கொள்ள முடியும்.  ஆமைகள் நீருக்குள்ளேயோ நீரையொட்டியோ வாழ்ந்தாலும் நீருக்கடியில் முட்டையிடாமல் தரையிலேயே இடுகின்றன. ஆமை மேலோடு, கீழோடு ஆகிய இரண்டு பாகங்களாக உள்ளது. எலும்புப் பொருட்களால் ஆன இந்த ஓடுகள் ஆமையின் உடலின் பக்கவாட்டில் இணைந்துள்ளன. இது ஆமையின் உடலுடன் ஒட்டியுள்ளதால், சில உயிரினங்கள் தங்கள் தோலை உரிப்பது போல ஆமையினால் இந்த ஓட்டில் இருந்து வெளிவரமுடியாது. ஆமைகள் பெரும்பாலான நேரம் நீருக்கடியில் இருந்தாலும் மூச்சு விடுவதற்காக அவை நீருக்கு மேலே அவ்வப்போது வந்தாக வேண்டும். இனத்தைப் பொறுத்து ஒரு ஆமையால் ஒரு நிமிடம் முதல் ஒரு மணி நேரம் நீருக்கடியில் இருக்க முடியும். சில வகை ஆமைகள் வாழ்நாள் தரையிலேயே வாழ்கின்றன. ஆமைகள் பல மனிதர்களால் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. சில நாடுகளில் ஆமைகள் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றன. இது சில ஆமையினங்களின் அழிவுக்கும் வழிவகுத்துள்ளது.

yn

இந்நிலையில்  தமிழ்நாட்டின் முதல் ஆமை பாதுகாப்பு மறுவாழ்வு மையம் சென்னையில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.6.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலிவ் ரிட்லி, கிரீன் ,லெதர் பேக் ,ஹாவ்க்ஸ்பில் ,லோக்கர் ஹெட் உள்ளிட்ட கடல் ஆமைகள் இனங்களை பெருக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளது.