ஒன்றரை லட்சம் மகளிர் திரளும் பிரமாண்ட மாநாடு- வெற்றிக்கணக்கு மேற்கிலிருந்து உதயமாகட்டும்: செந்தில் பாலாஜி
வாக்குச்சாவடிக்கு 15 மகளிர் என 10,000 வாக்குச்சாவடிகளில் இருந்து ஒன்றரை லட்சம் மகளிர் திரளும் பிரம்மாண்டமான ‘வெல்லும் தமிழ்பெண்கள்’ மாநாடு... வெற்றிக்கணக்கு மேற்கிலிருந்து உதயமாகட்டும் என தி.மு.க மேற்கு மண்டல பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க மேற்கு மண்டல பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி தனது எக்ஸ் தளத்தில், “திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதியில், வருகின்ற டிசம்பர் 29, திங்கள் அன்று, 'வெல்லும் தமிழ்ப்பெண்கள்' மேற்கு மண்டல மாநாடு நடத்திட வாய்ப்பளித்த, கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களுக்கும், கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு கனிமொழி அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதியில், வருகின்ற டிசம்பர் 29, திங்கள் அன்று, 'வெல்லும் தமிழ்ப்பெண்கள்' மேற்கு மண்டல மாநாடு நடத்திட வாய்ப்பளித்த,
— V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@V_Senthilbalaji) December 17, 2025
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கும்,
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் @Udhaystalin… pic.twitter.com/CZiriu0Jxs
மேற்கு மண்டலத்தில் 35 தொகுதிகளில் உள்ள 10,000 வாக்குச்சாவடிகளில், வாக்குச்சாவடிக்கு 15 மகளிர் என ஒன்றரை லட்சம் மகளிர் திரளும் பிரம்மாண்ட மாநாடாக நடத்துவோம்.! 1.31 கோடி மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, விடியல் கட்டணமில்லா பேருந்துப் பயணம், கல்வி கற்கும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம், வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பாதுகாப்பான தோழி விடுதி, இந்தியாவிலேயே அதிக அளவாக 43% வேலைக்குப் போகும் பெண்களைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதற்கான சூழல் என மகளிர் மேம்பாட்டுக்காக தொடர்ச்சியான திட்டங்களை வகுத்துத் தரும் மாண்புமிகு கழகத்தலைவர் அவர்களை மீண்டும் அரியணையில் அமர்த்துவோம்.! வெற்றிக்கணக்கு மேற்கிலிருந்து உதயமாகட்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.


