"வாக்காளர்களுக்கு ரூ.1,000 அண்ணாமலை கிட்ட இத கேட்டு சொல்லுங்க"- செந்தில்பாலாஜி
எதை வேண்டுமானாலும் பேசலாம் என்பதால் தான் அண்ணாமலை எங்கு இருக்க வேண்டுமோ அங்கு தான் இருக்கிறார் என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட காந்திபுரம் வி கே கே மேனன் சாலையில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வி கே கே மேனன் சாலையிலிருந்து சித்தாபுதூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கு நடந்து சென்றேன் வாக்குகளை சேகரித்த செந்தில் பாலாஜிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, “2021 தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் வாக்காளர்களுக்கு அண்ணாமலை ரூ.1000 கொடுத்தாரா? என நீண்ட நாட்களாக கேட்டு வருகிறேன். இதுவரை பதில் இல்லை. இப்போது நாமும் கேட்பதில்லை. 2021 தேர்தலில் அரவக்குறிச்சியில் பணம் கொடுத்தாரா? இல்லை? நேர்மையான அரசியல்வாதி எனக் கூறும் அவர் பதில் சொல்லட்டும். தேர்தலில் சுயட்சை வேட்பாளர்கள் போட்டியிடுவது அவரவர் விருப்பம் இதில் அரசியல் கட்சி பங்கு என்ன உள்ளது?. என்னுடன் வந்தவர்களில் கரூரை சேர்ந்த 10 பேரை காட்டுங்கள். நாடாளுமன்ற தேர்தலின் போது கோவையில் அவருடன் பணியாற்றிவர்கள், அவர் அமைத்த "வார் ரூமில்" இருந்தவர்கள் கோவையை சேர்ந்தவர்களா? அனைத்திற்கு ஒரு அளவு உள்ளது. நேரலையில் காட்டுவதால் எதை வேண்டுமானாலும் பேசலாமா? இதனால் தான் அவர் எங்க இருக்க வேண்டுமோ அங்கு இருக்கிறார். சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு கடைசியாக தான் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று முதல் பிரச்சாரம் துவங்கியுள்ளனர். விரைவில் செயல் வீரர் கூட்டம் நடைபெற உள்ளது.
மக்களிடம் வாக்கு கேட்க வரும் பாஜக கூட்டணி வேட்பாளர் ஒன்றிய அரசு கோவைக்கு கொடுத்த திட்டங்களை சொல்லி வாக்கு கேட்க வேண்டும். எதுவும் செய்யாமல் மெட்ரோ திட்டத்தையும் புறக்கணித்தவர்கள், கோவை வளர்ச்சியில் என்ன அக்கறை செலுத்த போகிறார்கள். பாஜக அரசு அமைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் கோவைக்கு என்ன செய்தார்கள்? கோவையில் வளர்ச்சி திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் அந்த அளவிற்கு முதல்வர் கொடுத்துள்ளார். திராவிட மாடல் அரசு கோவைக்கு செம்மொழி பூங்கா, பெரியார் நூலகம், ஜி.டி.நாயுடு மேம்பாலம், மேற்கு புறவழிசாலை, ஹாக்கி மைதானம், என திட்டங்களை அடுக்கி சொல்கிறேன். அண்ணாமலை பட்டியலிட்ட ஒரு திட்டத்தையாவது சொல்லுங்கள். மக்கள் தொகை குறைவாக உள்ள பகுதிகளுக்கு மெட்ரோ கொடுத்த அரசுக்கு கோவை, மதுரைக்கு கொடுப்பதில் என்ன பிரச்சனை. இங்கு மக்கள் பயணிக்க கூடாதா? இதுவரை 5 தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளேன். இது 6 வது தேர்தல் எதிர் கட்சி வேட்பாளர் அல்லது கட்சியை விமர்சித்து வாக்கு கேட்டது இல்லை. நாங்கள் என்ன செய்வோம், என்ன செய்துள்ளோம் என சொல்லி தான் வாக்கு கேட்பேன். அது மக்களிடையே நம்பிக்கை உருவாக்கும், தனிப்பட்ட விமர்சனம் என்னிடம் இருக்காது” என்றார்.



