"புதிய கட்சிகள் மக்களிடம் தங்கள் இருப்பை காட்டிக்கொள்கின்றனர்! மீண்டும் மு.க.ஸ்டாலினே முதல்வராவார்”- செந்தில்பாலாஜி

 
senthilbalaji senthilbalaji

2026 சட்டமன்ற தேர்தலில் பொருத்தவரை மீண்டும் இரண்டாவது முறையாக மாபெரும் வெற்றி பெற்று ஸ்டாலின் தான் முதலமைச்சர் ஆவார் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் 8.17 கோடி மதிப்பீட்டில் பணி தொடக்க விழா மற்றும் திறப்பு விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் புக புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் சுற்றுவட்டார பகுதியில்  வசிக்கும் பொதுமக்களுக்கு சிறப்பு வரன்முறை பட்டா, நத்தம் புறம்போக்கு பட்டா என 414 நபர்களுக்கு பட்டா வழங்கி , 5 கோடியே 98 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை முன்னா முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார் 
மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, திமுக பொறுப்பாளர்கள், அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, “எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் புதிதாக ஆரம்பிக்கும் போதும் சரி, பழைய கட்சிகளாக இருந்தாலும் சரி எங்களுக்கு போட்டி திமுக தான் என்று கூறுகின்றனர். வேறு யாரையும் தங்களுக்கு போட்டியாக சொல்வதில்லை? அந்த அளவிற்கு மக்களுடைய மனதில் நிலைத்திருக்க கூடிய இயக்கம் திமுக தான். திமுக நேர்மையான மக்களுக்கான ஆட்சியை வழிநடத்தி வருகிறது. அதனால் தான் திமுக தான் போட்டி என்று அவர்கள் சொல்வதால் தங்களது இருப்பை மக்களிடத்தில் காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் பொருத்தவரை மீண்டும் இரண்டாவது முறையாக ஸ்டாலின் தான் முதலமைச்சர் ஆவார். இரண்டாவது முறையாக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார், அதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள் 

புதிய கட்சியாக இருக்கட்டும், பழைய கட்சியாக இருக்கட்டும் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் எவ்வளவு வாக்கு சதவீதம் வாங்கி உள்ளார்கள் என்று பொறுத்திருந்து பாருங்கள். திமுக அரசை பொருத்தவரை மகளிர் உரிமைத் தொகை, விடுபட்டவர்களுக்கும் தொடர்ந்து கொடுத்து வருகிறோம், மேல்முறையீடு செய்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கு வாய்ப்பு வழங்குகிறோம். வட மாநிலத்தைப் பொறுத்தவரை பாஜக அரசு தேர்தல் நேரத்தில் அறிவிப்பு வெளியிட்டு தேர்தலுக்கு முன்பாக கொடுத்துவிட்டு தேர்தல் முடிந்த பின் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்கின்றனர். பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியது தான் நமது முதல்வரின் நோக்கம், விதிமுறைகளுக்கு உட்பட்ட தான் பயனாளிகள் தேர்வு நடைபெறுகிறது. 2026 இல் மீண்டும் திமுக தான் வெற்றி பெறும் பொறுத்திருந்து பாருங்கள்” என்றார்.