அமைச்சராக பதவியேற்றார் செந்தில் பாலாஜி! கைக்குலுக்கி வாழ்த்தினார் முதல்வர்
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்றார்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சேலம் ஆர்.ராஜேந்திரன், செந்தில் பாலாஜி, கோவி செழியன் மற்றும் நாசர் ஆகியோர் அமைச்சராக பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்பு உறுதிமொழி மற்றும் ரகசிய காப்பு உறுதிமொழி எடுத்து கொண்டார்.
தமிழகத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுகவிடம் இருந்து தட்டிப்பறித்து மீண்டும் ஆட்சி அமைத்தது திமுக, 3 ஆண்டுகள் முடிவடைந்து 4வது ஆண்டை நோக்கி திமுக ஆட்சி சென்று கொண்டுள்ளது. இந்த 3 ஆண்டில் அமைச்சர் நாசர் மட்டும் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் புதிய அமைச்சராக உதயநிதி மற்றும் டிஆர்பி ராஜா இடம்பெற்றனர். அதே நேரத்தில் ஒரு சில அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றி அமைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பதவிநீக்கம் செய்யப்பட்ட நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவியும், அமைச்சர் பதவி பெற்ற உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.