போலீஸ் துன்புறுத்த கூடாதா? முதல்ல சரணடையுங்க! - முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உயர்நீதிமன்றம் செக்!
தவெக எம்.எல்.ஏ வை பேரம் பேசி ஆட்சி கவிழ்க்க முயன்றதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி உள்ளது. முன்ஜாமின் பெற்ற நிலையில், போலீசார் தங்களை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இருவரது மனுக்களையும் தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. ''முன் ஜாமின் வழங்கப்பட்டு இதுவரை இருவரும் சரணடையவில்லை; சரணடையாத பட்சத்தில் துன்புறுத்தக்கூடாது என எப்படி கோர முடியும்? என நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.
ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் மீதும் முகாந்திரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட இருந்தது. உடனே செந்தில் பாலாஜி, அசோக் குமார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதன்படி திருவல்லிக்கேனி காவல் நிலையத்தில் ஆஜராகி கயெழுத்து இட வேண்டும் என்றும், நீதிமன்றத்தின் நகல் கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் காவல் நிலையத்தில் வந்து ஆஜர் ஆக வேண்டும் என நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால் இதுவரை இருவரும் ஆஜர் ஆகவில்லை.
இந்த நிலையில் தான், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவில், ஏற்கனவே நாங்கள் முன் ஜாமீன் பெற்றுள்ளோம், இந்த நிலையில் வேறு வழக்குகளில் எங்களை காவல்துறையினர் துன்புறுத்த வாய்ப்பு உள்ளது. கைது செய்யக்கூடும் என்ற அச்சம் உள்ளது. மேலும் எங்களை காவல் துறையினர் துன்புறுத்தக் கூடாது" என்று கூறப்பட்டது. இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு சார்பில், மனுவில் பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டுகளை சொல்லி இருப்பதனால் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் தேவை என கூறப்பட்டது. செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "குதிரை பேர வழக்கில் முன் ஜாமீன் பெற்ற செந்தில் பாலாஜி, அசோக் குமார் வேறு வழக்குகளில் கைது செய்யப்படக்கூடும் என அச்சம் இருப்பதனால், வழக்கு விசாரணை என்ற பெயரில் என்னை துன்புறுத்தக் கூடாது என்றும், மற்றப்படி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பார்" என்றும் வாதிட்டனர்.
அப்போது நீதிபதி, மனுதாரர் தரப்பினர் ஏற்கனவே இந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்றுள்ளனர். ஆனால் இதுவரை சரணடைய சொல்லிய கீழமை நீதிமன்றத்தின் முன் ஜாமீனை பெறவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் மறுபடி முன் ஜாமீன் பெறாமல் உள்ளனர். எனவே இன்னும் இவர் சரணடையாத நிலையில் எப்படி காவல்துறையினர் துன்புறுத்தக்கூடாது என கோர முடியும்? என்று கேள்வி எழுப்பினார். மேலும், மற்ற வழக்குகளில் முன் கூட்டியே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், மனுதாரர் கூறியபடி தற்போது எந்த உத்தரவையும் கோர முடியாது என கூறி இருவரது மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.