செந்தில் பாலாஜி காவல் 45-வது முறையாக நீட்டிப்பு

 
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு - ஐகோர்ட்டை நாட சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தல்..

செந்தில் பாலாஜி வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நாளை மறுநாள் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.

செந்தில் பாலாஜி

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்க துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். கைதாகி ஓராண்டாகியுள்ள அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. அமலாக்கத்துறை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரிய மனு மீதான விசாரணையில், செந்தில் பாலாஜி தரப்பில் வாதங்களை துவங்காத நிலையில் வரும் 12 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. 

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 45வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கின் விசாரணை ஜூலை 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.