#BREAKING செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது
டாஸ்மாக் முறைகேட்டில் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்களான கார்த்திக், ரமேஷ் ஆகியோரை கைது செய்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த 2021-2025-ஆம் ஆண்டு காலகட்டத்தில், திமுக அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இந்த காலகட்டத்தில், டாஸ்மாக் நிறுவனங்களுக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார்களுக்கு உரிமம் வழங்கியது, ஊழியர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளில் முறைகேடுகள் செய்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் எஸ்.விசாகன் உள்ளிட்ட 7 பேர் மீது ஊழல் தடுப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜியை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், டாஸ்மாக் முறைகேட்டில் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்களான கார்த்திக், ரமேஷ் ஆகியோரை கைது செய்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் குதிரை பேர வழக்கில் ஜாமினில் வெளிவந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

