அலைப்பேசியை ஆஃப் செய்தால் கடும் நடவடிக்கை- செந்தில் பாலாஜி எச்சரிக்கை
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகு நடைபெற்ற முதல் ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி , கே.என்.நேரு, பொன்முடி, புதிதாக அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், கோவி. செழியன், ராஜேந்திரன் உள்பட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் வளர்ச்சித் திட்டங்களை விரைவில் செயல்படுத்துவது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும், வளர்ச்சித் திட்டங்கள் முழுமையாம மக்களை சென்றடைய, சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கோவை மாவட்டத்திற்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார். வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜியை நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனையடுத்து பருவமழை காலத்தில் அனைத்து அலுவலர்களும் தனது அலைப்பேசியை எந்த காரணம் கொண்டும் ஆஃப் செய்யக்கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


