ஒத்த ஓட்டு ஓட்டைவாய்க்கு சுயபுத்தியும் இல்லை; சொன்னாலும் புரிவதில்லை- செந்தில்பாலாஜி

 
senthil

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாகவும், காவல்துறையின் மீதிருக்கும் குற்றச்சாட்டுக்கள் குறித்தும் இன்று அறிக்கை வெளியிட்டிருந்தார். 

Senthil Balaji Biography, Career, Family and Controversies - TFIPOST

அதில், “தீவிரவாத சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க சமரசமின்றி நடவடிக்கை எடுங்கள். வழக்கின் போக்கை திசை திருப்ப என்ன கேட்டுவிட்டோம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். கேள்வி எழுப்பக்கூடாது என கூறுவதற்கு போலீஸ் துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை.மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய சுற்றறிக்கை, 21ம் தேதி கிடைத்ததாக கூறப்படுவது பொய். அக்.,21ல் ஜமீஷா முபீன் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்திருந்ததற்கு போலீஸ் மறுப்பு தெரிவிக்குமா? தீவிரவாத சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கும் படி, நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளும் அரசை கேள்வி எழுப்புவது, மக்களிடம் உண்மையை கொண்டு சேர்ப்பது எங்கள் கடமை. 

6 தனிப்படைகள் அமைத்து விசாரிக்கும் போலீஸ் துறை அடுத்தகட்ட உண்மைகளை சொல்ல தயங்குவது ஏன்? இதுவரை இது ஒரு தீவிரவாத சதிச்செயல் என்று சொல்ல மறுப்பது ஏன்? கோவையில் நடந்தது தற்கொலைத் தாக்குதல் என தமிழக அரசு அறிவிக்காமல் மவுனம் காப்பது ஏன்?, கைதான 5 பேர் மீது எந்த பிரிவின் கீழ் வழக்கு என்பதை குறிப்பிடாதது ஏன்? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருந்தார்.இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “எனக்கும் கோவை சம்பவத்திற்கும் என்ன சம்பந்தம் என்று அரசியல் கோமாளி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டிருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டப்படி அமைச்சராக பொறுப்பேற்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளேன். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி நிலைமையை ஆய்ந்து, ஊடகத்தைச் சந்தித்து விளக்கினேன். மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒத்த ஓட்டு ஓட்டைவாய் எதையாவது உளறிக் கொட்டி ஊடக வெளிச்சத்திலேயே காய்ந்து கொண்டிருக்கிறது. சுயபுத்தியும் இல்லை; சொன்னாலும் புரிவதில்லை” என சாடியுள்ளார்.