என் உயிர் உங்கள் காலடியில்... செந்தில் பாலாஜி உருக்கம்
ஒவ்வொரு நாளும், நிமிடமும், நொடியும் உங்களையே நினைத்திருந்தேன் தலைவரே என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலினை தமிழக அமைச்சர்கள், திமுக மாவட்ட செயலாளர்கள் பொன்னாடை கொடுத்து வரவேற்றனர். அப்போது
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்ததை அடுத்து அவரும் சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அப்போது, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பொன்னாடை கொடுத்து காலில் விழுந்து ஆசிப் பெற்றார்.
471 நாட்கள் தனிமையின் இருள் நீங்கி சூரியனின் காலடியில்.
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) September 27, 2024
ஒவ்வொரு நாளும், நிமிடமும், நொடியும் உங்களையே நினைத்திருந்தேன்
தலைவரே.!
தாயுமானவராய் தாங்கினீர்கள்.. என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம்..
உங்கள் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் வாழ்நாள் முழுக்க நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்! pic.twitter.com/wtwJCYvg0R
இந்த சந்திப்பு குறித்து நெகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ள செந்தில் பாலாஜி, “471 நாட்கள் தனிமையின் இருள் நீங்கி சூரியனின் காலடியில்.... ஒவ்வொரு நாளும், நிமிடமும், நொடியும் உங்களையே நினைத்திருந்தேன் தலைவரே.! தாயுமானவராய் தாங்கினீர்கள்.. என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம்.. உங்கள் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் வாழ்நாள் முழுக்க நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.