‘மக்களின் மனதை வெல்ல அற்புத வாய்ப்பு’... முதல்வருக்கு செந்தில்பாலாஜி நன்றி

 
செந்தில் பாலாஜி செய்த தியாகம் என்ன?- மு.க.ஸ்டாலின் 

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.  அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகு நடைபெற்ற முதல் ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி ,  கே.என்.நேரு, பொன்முடி, புதிதாக அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள செந்தில் பாலாஜி, ஆவடி நாசர்,  கோவி. செழியன், ராஜேந்திரன் உள்பட  அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர்.  

 ‘வாழ்நாள் முழுவதும் உங்கள் கைகளை இறுகப்பற்றிக் கொள்கிறேன்’ - அமைச்சர் செந்தில் பாலாஜி உருக்கம்..  


தமிழ்நாட்டில் வளர்ச்சித் திட்டங்களை விரைவில் செயல்படுத்துவது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.  மேலும், வளர்ச்சித் திட்டங்கள் முழுமையாம மக்களை சென்றடைய, சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கோவை மாவட்டத்திற்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


இதற்கு டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ள செந்தில் பாலாஜி, “கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக என்னை நியமித்துள்ள மாண்புமிகு கழகத்தலைவர் அவர்களுக்கும், பரிந்துரை செய்த மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுக்கும்  நெஞ்சார்ந்த நன்றி! களப்பணியாற்றி, பணிகளைத் துரிதப்படுத்தி கோவை மாவட்ட மக்களின் மனதை வெல்லும் இந்த அற்புத வாய்ப்பை வழங்கிய மாண்புமிகு கழகத்தலைவரின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்வேன்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.