"கரூர் சம்பவத்துக்கு நான் காரணமா?"- நயினார் நாகேந்திரனுக்கு பதில் கொடுத்த செந்தில் பாலாஜி
கரூர் சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு வைத்து நயினார் நாகேந்திரன் பேசிய நிலையில், அரசியலுக்காக, அற்பத்தனமான கருத்துக்களை சொல்பவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார்.

"உலகம் உங்கள் கையில்" என்ற திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லட்சம் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை இன்று துவக்கி வைத்தார் இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கரூர் தான்தோன்றி மலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் கரூரைச் சேர்ந்த அரசு கல்லூரி மாணவ மாணவிகள் 2,376 பேருக்கு மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டு, மடிக்கணினிகள் வழங்கப்பட்டது. கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த முன்னால் அமைச்சர் செந்தில் பாலாஜி, புதுக்கோட்டையில் நடைபெற்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நடைபயணம் நிறைவு விழா நிகழ்ச்சியில், கரூர் சம்பவத்துக்கு செந்தில்பாலாஜிதான் காரணம் என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. ஒவ்வொருவரும் ஆஜராகி என்ன நடந்தது என்று சொல்லி வருகின்றனர். மேடையில் பேசிய பாஜக மாநில தலைவர், 12 மணி நிகழ்ச்சிக்கு 7 மணி நேரம் தாமதமாக வந்தார் என்பதை மட்டும் சொல்லிவிட்டு கடந்து சென்றார். பிரச்சார வாகனத்தின் விளக்கை ஏன் அணைத்தார். ஏன் உள்ளே சென்றார். காவல்துறை அறிவுரையை ஏற்காமல் மாற்றுப்பாதையில் ஏன் சென்றார் என்பதை எல்லாம் பேசி இருக்கலாம். அரசியலுக்காக, அரசின் மீது தனிப்பட்ட முறையில் கால் புரட்சி காரணமாக அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று குறுகிய மனப்பான்மையோடு நயினார் நாகேந்திரன் பேசியிருக்கிறார். ஒரு கட்சியின் மாநில தலைவராக அரைகுறை தனமாக என்ன நடந்தது என்பதை முழுமையாக தெரிந்து கொள்ளாமல், சொல்லப்பட்ட கருத்து அது, அப்படிப்பட்ட கருத்துக்கு நான் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. மக்களுக்கு தெரியும் என்ன நடந்தது என்று, கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் தெரியும் அரசு எந்த அளவுக்கு செயல்பட்டது. முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இரவோடு இரவாக வந்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு எந்த அளவுக்கு துணை நின்றது என மக்களுக்கு நன்றாக தெரியும். அரசியலுக்காக, அற்பத்தனமான கருத்துக்களை சொல்லும் சில அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பதில் சொல்லி என்னுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றார்.


