நிர்மல் குமார் இல்ல.. collection குமார்- கலாய்த்து தள்ளிய செந்தில் பாலாஜி
5 மாதங்களாக டெண்டர் போடாமல் 5 நாட்களில் அவசரகதியில் ரூ.35-க்கு மின்சாரத்தை கொள்முதல் செய்வது ஏன்? என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, “சராசரியாக 5-7 சதவீதம் மின் தேவை அதிகரிக்கும் என தெரிந்தும் 5 மாதங்களாக டெண்டர் போட்டு மின்சாரம் கொள்முதல் செய்ய முயற்சி எடுக்காமல், 5 நாட்களில் அவசரகதியில் ரூ.35-க்கு மின்சாரத்தை கொள்முதல் செய்வது ஏன்? தமிழக அரசு இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிக விலையில் மின்சாரம் கொள்முதல் செய்துள்ளது. இது மிகப்பெரிய ஊழலுக்கு வழிவகுக்கும். கடந்த காலங்களில் 20 ரூபாய்க்கு மின்சாரம் வாங்கும் பொழுது தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் எனும் கூறு அப்பொழுதைய நிர்வாகியாக இருந்தவர் இப்பொழுது அமைச்சராக இருக்கிறவர் 35 ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார்கள். இதை என்னவென்று கூறுவது? தலைமைச் செயலகத்திலேயே மின்வெட்டு ஏற்படும் அளவுக்கு இந்த ரீல்ஸ் ஆட்சி, மிக மோசமான நிலையில் இருக்கு. இதுக்கு காரணம், இந்த டம்மி முதலமைச்சர்தான்.
தமிழ்நாடு அரசின் சொந்த மின் உற்பத்தியை 30% - 35%-ஆக குறைத்துள்ளது த.வெ.க அரசு. இதற்கு காரணம், TANGEDCO-ன் சொந்த உற்பத்தியை குறைத்து, வெளி சந்தையில் மின் கொள்முதல் செய்யும் நடமுறையை மேற்கொள்கிறார் அமைச்சர் நிர்மல் குமார். வேறு மாநிலங்களில் இருந்து யூனிட்டிற்கு ரூ.37 அளித்து மின்கொள்முதல் செய்கிறார்கள். நிர்மல் குமார் இல்ல.. collection குமார்... வெளிச்சந்தையில் யூனிட்டிற்கு ரூ35-க்கு கொள்முதல் செய்வது, மின்துறையின் ஒட்டுமொத்த நிதிநிலையை சீரழித்துவிடும் ஆந்திராவில் இருந்து தவெக அரசு அதிக மின்சாரத்தை கொள்முதல் செய்கிறது. திமுக ஆட்சியில் மின் தேவை அதிகரித்தாலும் மின்வெட்டு ஏற்படவில்லை” என்றார்.

