"தவெக அரசு 5 ஆண்டுகள் தொடர்ந்தால் தமிழ்நாடு 25 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லும்"- செந்தில்பாலாஜி
பாட்டிலுக்கு 10 ரூபான்னு கரூர்ல பாட்டு பாடுனாங்களே இப்போ என்ன பாட்ட பாடுவாங்க.. இந்த ஆட்சி 5 ஆண்டுகள் தொடர்ந்தால் தமிழ்நாடு 25 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, “தவெக ஆட்சியில் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 20 முதல் 30 ரூபாய் வரை வாங்குகின்றனர். கரூரில் பாட்டு பாடினவர்கள், இப்போது என்ன பாட்டு பாடுவார்கள். ஒரு கருத்தைச் சொல்லும் முன் அதுகுறித்த உண்மைத் தன்மையை அறியாமல், எழுதிக் கொடுக்கும் ஸ்கிரிப்ட்டை படித்தால் இதுதான் நிலை. தவெக அரசு 5 ஆண்டுகள் தொடர்ந்தால் தமிழ்நாடு 25 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லும். திராவிட மாடல் ஆட்சியில் மருத்துவம், தொழில், கல்வி என அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டை முன்னோக்கி கொண்டு சென்றவர் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ஆனால், இன்று அதெல்லாம் பின்னோக்கிச் செல்கிறது.
பாட்டிலுக்கு 10 ரூபான்னு கரூர்ல பாட்டு பாடுனாங்களே இப்போ என்ன பாட்ட பாடுவாங்க.. இந்த அரசு சீரான மின் விநியோகத்திற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்ன செய்வதென்று தெரியாமல் மின்வாரிய ஊழியர்கள் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். 3 ஃபைல் ரெடியா இருக்குன்னு சொன்னாங்க, சரி திறப்பாங்கனு பாத்தா திறக்கவில்லை. தி.மு.க ஆட்சியில் எந்த தவறுகளும் நடந்ததே இல்லை, எத்தனை ஆண்டுகள் தேடினாலும் அவர்களால் கண்டுபிடிக்க முடியாது” என்றார்.

