“ஆண்டுக்கு ரூ.1,200 கோடி சேமித்தோம்; ரூ.75,000 கோடி வட்டி கட்டிருக்கோம்! இது வெள்ளை அறிக்கையில் இல்லை”- செந்தில் பாலாஜி

 
zs

சீரான மின் விநியோகத்துக்கு வித்திட்டவர் மு.க.ஸ்டாலின். நலிவடைந்துகிடந்த மின் துறையை போதுமான நிதி ஒதுக்கி காப்பாற்றியவர் ஸ்டாலின் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, “அதிமுக ஆட்சியில் 3 கட்டங்களாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதிமுக ஆட்சியை ஒப்பிடுகையில் வருவாய் பற்றாக்குறையை திமுக அரசு குறைத்தது. வருவாய் பற்றாக்குறையை ரூ.58,000 லிருந்து ரூ.34,000 கோடியாக குறைத்தோம். இதனால் வட்டி மட்டும் ரூ.1,200 கோடி மிச்சப்படுத்தப்பட்டது. சிக்கனமான நடவடிக்கையால் திமுக ஆட்சியில் ஆண்டுக்கு ரூ.1200 கோடி மிச்சப்படுத்தியுள்ளோம். மின் உற்பத்தியை அதிகரிக்கவே செலவு அதிகரித்தது. சீரான மின் விநியோகத்துக்கு வித்திட்டவர் மு.க.ஸ்டாலின். நலிவடைந்துகிடந்த மின் துறையை போதுமான நிதி ஒதுக்கி காப்பாற்றியவர் ஸ்டாலின். திமுக ஆட்சியில் தடையின்றி மின் விநியோகம் செய்யப்பட்டது. 

கடந்த 5 ஆண்டுகளில் மின் துறை வருவாய் ரூ.1.77 லட்சம் கோடியாக உயர்ந்தது. வெளி மாநிலங்களில் மின்சாரம் வாங்கியதால் செலவு ஏற்பட்டது. இதை என் வெள்ளை அறிக்கையில் சொல்லவில்லை. வெள்ளை அறிக்கையில் முக்கியமான விவரங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் வாங்கிய கடனுக்கான வட்டியை நாங்கள் செலுத்திய விவரம் மறைக்கப்பட்டுள்ளது. பல தகவல்களை மறைத்து அவர்களுக்கு வசதியாக வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தவெக அரசு உள்நோக்கத்தோடு வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை கணிசமாக உயர்கிறது. அதனால் கொள்முதல் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். கட்டண உயர்வால் மட்டுமல்ல, சீர்த்திருத்தங்கள் வாயிலாகவே வருவாயை அதிகரித்துள்ளோம். மின்துறையில் வருவாய் அதிகரித்ததாலும் கூட கொள்முதல் செலவினங்கள் உயர்ந்திருக்கின்றன.திமுக ஆட்சியின் பணி நியமன ஆணையை விஜய் வழங்கினார். ஆகஸ்ட்டில் தேர்வு வைத்தோம். இப்போது பணி ஆணை வழங்கியுள்ளனர்.” என்றார்.