மீண்டும் அமைச்சராகிறார் செந்தில் பாலாஜி
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம், நிபந்தனை ஜாமின் வழங்கியதை அடுத்து அவர் சிறையிலிருந்து வெளிவந்துள்ளார்.
சிறையிலிருந்து வெளிவந்த 2 நாட்களில் அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட அமைச்சர் பதவி மீண்டும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் உச்சநீதிமன்றம் விதித்த நிபந்தனை. அமைச்சராக எந்தத் தடையும் சட்டபூர்வமாக இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றவுடன் திமுக அமைச்சரவையில் செந்தில் பாலாஜிக்கு இலாகா ஒதுக்கப்பட்டது. குறிப்பாக, அவருக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, மின்சாரத் துறை ஆகிய இரு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் தற்போது புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அவருக்கு இலாகா இன்னும் ஒதூக்கப்படவில்லை.
கடந்த ஜூன் மாத்ம்செந்தில் பாலாஜி கைதானவுடன் அவரின் மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துச்சாமிக்கும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இதனால், சிறையில் 243 நாட்கள் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார். பின்னர் பிப்ரவரி மாதம் செந்தில்பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்தார்.