சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு

 
tn

சவுக்கு சங்கருக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு தொடர்ந்தார். 

பிரபல யூட்யூபரான சவுக்கு சங்கர் திமுக அரசு குறித்து தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.  குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலின்,  அமைச்சர்கள்  உதயநிதி ஸ்டாலின்,  செந்தில் பாலாஜி ஆகியோரை தனது சமூக வலைத்தள பக்கத்தில் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.  ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமானவரி சோதனை , தமிழக அமைச்சரவை மாற்றம்  குறித்து கடுமையாக விமர்சித்து வரும் இவர் , மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அடுத்த முதலமைச்சர் என்றும் திமுகவை அவர் அபகரிக்க திட்டமிட்டுள்ளார் என்றும் வீடியோ வெளியிட்டார்.

savukku

 செந்தில் பாலாஜி பல கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்துள்ளதாகவும் , பணிநியமன ஆணைக்கு  பல லட்சம் வசூலிப்பதாகவும் கூறியுள்ளார்.  அத்துடன் கரூரில் பல கோடி மதிப்பிலான வீடு கட்டி வருவதாகவும் பல்வேறு சமூக வலைத்தள சேனல்களில்  பேட்டி கொடுத்து வருகிறார்.
senthil balaji

இந்நிலையில் அவதூறு வீடியோக்கள் வெளியிட்டதாக சவுக்கு சங்கருக்கு எதிராக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 4  வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எந்த அடிப்படையும் இல்லாமல் தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் சவுக்கு சங்கருக்கு உரிய தண்டனை அளிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது.