நீதிமன்ற உத்தரவை மதிக்காத செந்தில் பாலாஜி

 
செந்தில் பாலாஜி, அசோக் குமாருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப போலீஸ் திட்டம்

நீதிமன்ற உத்தரவை மதிக்காத செந்தில் பாலாஜிமுதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் பெற்ற முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை.

செந்தில் பாலாஜி

தவெக ஆட்சியை கவிழ்க்க எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் காலை, மாலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் செந்தில் பாலாஜி, அசோக் குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் பெற்றனர். அதன்படி, இன்று காவல்நிலையத்தில் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆஜராகவில்லை.

முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியை கவிழ்ப்பதற்காக அக்கட்சியின் எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசப்பட்டதாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அரசியல் காழ்ப்புணர்சி காரணமாக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பு கூறியுள்ளது குறிப்பிடதக்கது.