செந்தில் பாலாஜி ஜாமின் மனு - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
May 16, 2024, 13:00 IST1715844629424

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கை ஜூலை 10 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. உடல்நிலையை காரணம் காட்டி செந்தில் பாலாஜி ஜாமின் கேட்கிறார். இதற்கு, அவர் இன்னும் எம்எல்ஏவாக தொடர்வதால், சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளதாக ED கூறுகிறது. இந்நிலையில், இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் அவருக்கு ஜாமின் கிடைக்குமா? என எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த சூழலில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய வழக்கு ஜூலை 10க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் கேட்டுக் கொண்டதை அடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது; சொலிசிட்டர் ஜெனரல் இன்று ஆஜராகாத நிலையில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.