மோடி பின்னடைவால் சரியும் பங்குச்சந்தைகள்

 
முதலீட்டாளர்களை முட்டி தள்ளிய காளை! சென்செக்ஸ் 192 புள்ளிகள் குறைந்தது..

எக்சிட் போல் முடிவுகளுக்கும், வாக்கு எண்ணிக்கை முடிவுகளுக்கும் நேர் எதிராக இருக்கும் நேரத்தில் மோடி பின்னடைவால் சென்செக்ஸ் 2700 புள்ளிகள் சரிவடைந்துள்ளன.

பங்குச் சந்தை 4000 புள்ளிகள் சரிவு... தனிப்பெரும்பான்மை இல்லாத பாஜக? சந்தையில் என்ன நடக்கிறது?

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது.  நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.  பாஜக கூட்டணி கட்சிகள் இந்திய அளவில் 292 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.  காங்கிரஸ் கூட்டணி 223 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.  மற்ற கட்சிகள் 28 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன. மொத்தம் 543 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்ற வருகின்றன. 

சென்செக்ஸ் 3500 புள்ளிகள் வீழ்ச்சி! பங்குகளை வாங்கிக் குவிக்கும் முதலீட்டாளர்கள்!

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக வெற்றி பெறும் என சொல்லப்பட்ட நிலையில், சில இடங்களில் பாஜக தற்போது பின்னடைவை சந்தித்துள்ளது. குறிப்பாக வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் மாநில தலைவரான அஜய் ராய்  முன்னிலையில் உள்ளார். நரேந்திர மோடி பின்னடைவில் உள்ளார். இது பங்குச்சந்தையில் நேரடியாக எதிரொலித்துள்ளது. நேற்று வர்த்தகம் துவங்கும் போதே 2000 புள்ளிகளுக்கு அதிகமாகத் துவங்கி சுமார் 2500 புள்ளிகள் ஏற்றம் கண்டு 76468-ல் நிறைவடைந்த வர்த்தகம், இன்று கடும் இறக்கத்தைச் சந்தித்திருக்கிறது. சென்செக்ஸ் குறியீடு 3,485 புள்ளிகளை இழந்து, 72,275.46 இல் வர்த்தகமாகிறது. நிஃப்டி 1016.32 புள்ளிகள் குறைந்து 22,133.12 புள்ளிகளில் வர்த்தகமானது.