முதல்வருக்கு அரோகரா சர்ச்சை- திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள பரபரப்பு அறிக்கை

 
திருச்செந்தூர் முருகன் கோயிலில் 2 நாட்களுக்கு சாமி தரிசனம் ரத்து!

 

இனிவரும் காலங்களில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆன்மிக நிகழ்ச்சிகள் மற்றும் பக்தி இன்னிசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கலைஞர்கள், இறைபக்தி வசனங்கள், பாடல்களைத் தவிர எந்தவொரு கோஷத்தையோ, தனி மனிதத் துதிபாடல்களையோ கட்டாயம் தவிர்க்க வேண்டும்  என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியில் முதல்வருக்கு அரோகராஎன முழக்கம் எழுப்பப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற நிகழாண்டிற்கான சூரசம்ஹார நிகழ்ச்சியின் போது, ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த பக்தி இன்னிசை நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகர்கள் எழுப்பிய சில கோஷ வாக்கியங்கள், பொது வெளியில் ஏற்படுத்திய விமர்சனங்கள், திருக்கோயிலின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதாக அமைந்துவிட்ட படியால், இனிவரும் காலங்களில், திருக்கோயிலால் ஒழுங்கு செய்யப்படும் ஆன்மிக நிகழ்ச்சிகள் மற்றும் பக்தி இன்னிசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கலைஞர்கள் இறைபக்தி வசனங்கள் மற்றும் இறைபக்திப் பாடல்களைத் தவிர ஆன்மிகத்துக்குத் தொடர்பில்லாத எந்தவொரு கோஷத்தையோ, தனி மனிதத் துதிபாடல்களையோக் கட்டாயம் தவிர்த்து விட வேண்டும் என்பது இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.