திமுக கவுன்சிலர் தவெகவில் இணைவதை தடுப்பதாக பரபரப்பு புகார்
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட 33வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி தவெகவில் இணைய உள்ளதாக கூறி புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைப்பு விழாவுக்கு அக்கட்சி அலுவலகத்தில் ஏற்பாடுகளை செய்த தவெக நிர்வாகிகள், ஒரு மாதத்திற்கு முன்பே திமுக மாமன்ற உறுப்பினர் தவெகவில் செல்போன் எண் கொடுத்து உறுப்பினர் அட்டையை பெற்று விட்டதாகவும் இன்று அதிகாரப்பூர்வமாக இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆளும் தரப்பினரின் வற்புறுத்தலால் அவர் இன்று தவெகவில் இணையவில்லை என திமுக மாமன்ற உறுப்பினரின் தவெக உறுப்பினர் அட்டையை காட்டி புதுக்கோட்டை தவெக மத்திய மாவட்ட செயலாளர் பர்வேஸ் பேட்டியளித்துள்ளார்.

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட 33 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி. காந்திநகர் பகுதியைச் சேர்ந்த இவர் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்று கூறி புதுக்கோட்டை மேல மூன்றாம் வீதியில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் சேர்த்து அவரின் இணைப்பு விழாவும் தவெக நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையில் அவர் இன்று தவெகவில் இணைய வரவில்லை.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தவெக புதுக்கோட்டை மத்திய மாவட்ட செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான பர்வேஸ், திமுக மாமன்ற உறுப்பினராக உள்ள ராஜேஸ்வரி அவருக்குரிய முக்கியத்துவம் இல்லாததால் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாகவே தவெகவில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்ததாகவும் அவரே அவரது செல்போன் என்னைக் கொடுத்து ஓடிபி கூறி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தவெக உறுப்பினர் அட்டையை பெற்று விட்டதாகவும் இந்நிலையில்தான் இன்று புத்தாண்டு கொண்டாட்டத்துடன் அவரது இணைப்பு விழாவும் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் ஆளும் தரப்பினர் அவரை தவெகவில் இணையவிடாமல் தடுத்து விட்டதாகவும் அவரை அவர் பகுதியைச் சேர்ந்த இன்னும் சிலரையும் தவெக உறுப்பினர்களாக சேர்த்துள்ளதாகவும் அவரது உறுப்பினர் அட்டை உட்பட அவர் சேர்த்த நபர்களின் உறுப்பினர் அட்டை அனைத்தும் என்னிடம் இருக்கிறது என்று கூறி அதனை ஆதாரமாக காட்டினார். காலை வரை தங்களது கட்சி அலுவலகத்துக்கு திமுக மாமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி வருவதாக இருந்த நிலையில் அவரது பகுதியில் வசிக்கும் திமுகவைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகரை பார்த்து விட்டு வருகிறேன் என்று தெரிவித்தார் அவரை தவெகவில் இணைய கூடாது என திமுகவின் முக்கிய நிர்வாகிகள் வற்புறுத்தி உள்ளதால் தான் தற்பொழுது அவர் அதிகாரப்பூர்வமாக தாவீகாவில் இணைய வரவில்லை இருப்பினும் அவர் தவெகவின் உறுப்பினர் அட்டைக்கு அவர் விருப்பத்தின் அடிப்படையில் விண்ணப்பித்து அந்த அட்டை தற்பொழுது உள்ளது என தெரிவித்தார்.


