சாதியை சொல்லி திட்டியதாக திமுக எம். எல். ஏ மீது பரபரப்பு புகார்

 
s

திமுக எம். எல். ஏ வசந்தம் கார்த்திகேயன் தன்னை சாதி ரீதியாக மிரட்டியதாக பெண் வட்டார இயக்குனர், மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்துள்ளார்.

கள்ளக்குறியையைச் சேர்ந்த வட்டார இயக்குநர் லதாவை சாதி ரீதியாக பெயர் சொல்லி, திட்டியதாக, ரிஷிவந்தியம் திமுக எம். எல். ஏ வசந்தம் கார்த்திகேயன் மீது  மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.  அந்த புகாரில் ரிஷிவந்தியம் திமுக எம். எல். ஏ வசந்தம் கார்த்திகேயன் என்னை மிரட்டியதாகவும், வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி,  "நீ சாதி பார்த்து வேலை செய்கிறாய் " என்று சாதியை சொல்லி திட்டியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.