திருச்சூரில் பரபரப்பு! இன்ஸ்டா பிரபலம் நிஷா ரஃபேல் மீது போக்சோ வழக்கு..!
கேரளாவின் திருச்சூரில் 11 வயது சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக சமூக ஊடகப் பிரபலமான நிஷா ரஃபேல் மீது மேற்கு காவல் நிலையத்தினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுவன் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்இந்தப் பரிசோதனையின் முடிவில் சிறுவன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் குறித்துத் திருச்சூர் மேற்கு காவல் நிலையப் (Thrissur West Police) பகுதியினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளையில், நிஷா ரஃபேலுக்கு நெருக்கமான வட்டாரங்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளன. இரண்டு பிளாட்கள் (Flats) தொடர்பாக நிஷாவுக்கும் புகார்தாரருக்கும் இடையே நீண்டநாட்களாக நிலவி வரும் சொத்துப் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட முன்பகையே இந்த போலி வழக்கிற்கு முக்கிய காரணம் என்றும், திட்டமிட்டு புனையப்பட்ட வழக்கு இது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

