தமிழக அரசியலில் பரபரப்பு..!! திமுக கவுன்சிலருக்கு போலீஸ் சம்மன்..!!

 
Q

திமுக எம்பி கனிமொழி, மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன் முதல்வர் விஜயை ஒருமையிலும் தரக்குறைவாகவும் பேசி இருந்தார்.

கனிமொழி அமைதியாக அமர்ந்து இருப்பதும், பிரியா சிரித்தவாறு கேட்டு கொண்டு இருந்த வீடியோ இணையத்தில் வெளியானது.தவெக அமைச்சர்கள், கட்சியினர் திமுக கட்சி தலைவர் ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி ஆகியோரை கடுமையாக விமர்சித்து கண்டனம் தெரிவித்தனர்.

தவெக நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை போலீசார், சுதா தீனதயாளன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் 3 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளனர்.