சேலத்தில் பரபரப்பு.. அதிமுக பிரமுகர் சடலமாக கண்டெடுப்பு..
சேலத்தில் அதிமுக பிரமுகர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர் அதிமுக கிளைச் செயலாளர் ரவி, நேற்றிரவு ஆத்தூர் அருகே நடைப்பயிற்சிக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் ரவி வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் அவர் குறித்த தகவல் எதுவும் குடும்பத்தாருக்கு தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில், இன்று காலை அதிமுக கிளைச் செயலாளர் ரவி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். ரவி உயிரிழந்து கிடந்ததை கண்ட அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.,