காரைக்குடியில் பரபரப்பு! - சீமான் காரை மறித்துச் சோதனையிட்ட தேர்தல் அதிகாரிகள்..!

 
1

தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அனுமதி பெறாமல் கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று மார்ச் 29ம் தேதி, கன்னியாகுமரியில் அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் வாகனத்தையும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தியிருந்தனர். அதே போல் காரைக்குடி கண்டனூர் செக்போஸ்ட் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சீமான் காரை மறித்து தேர்தல் பறக்கும்படையினர் சோதனையிட்டனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீமான், காரில் இருந்து இறங்கி, பெண் அதிகாரி சுப்புலட்சுமியிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது இபிஎஸ், ஸ்டாலின் காரையும்சோதனை செய்ய வேண்டும் என்றார்.

ஓட்டுக்கு 1000 2000 சொல்ராங்க.. 30 கோடி ஒதுக்கி வெச்சி இருக்காங்க. எல்லாம் தெரியும் உங்களுக்கும் தெரியும்... அதை ஏன் புடிக்கல அதை விட்டுட்டு ஆட்டுக்குட்டி ஓட்டிட்டு போறவன் ஆஸ்பத்திரி போறவனை எல்லாம் புடிச்சுகிட்டு இருக்கீங்க...

ஓட்டுக்கு காசு கொடுக்காம உங்களால தடுக்க முடியுமா என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு அதிகாரியை திணறடித்தார்.     

இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.