தமிழக அரசியலில் மிகப்பெரிய ட்விஸ்ட்! கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தவெகவில் ஐக்கியம்

 
ச்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த நிர்வாகி மகேந்திரன் தவெகவில் இணைந்தார். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளராக நீண்டகாலம் பதவி வகித்தவர் மகேந்திரன். 1971ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு முழுநேர ஊழியராக பணியாற்றிவந்தவர். 2015ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர். மூத்த நிர்வாகி மகேந்திரன், சென்னை பனையூரில் பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் இணைத்துக்கொண்டார்.


இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மகேந்திரன், “காசு இல்லாமல் தேர்தலில் வென்று தவெக புரட்சி செய்துள்ளது. பொதுவுடைமை வேர்களை மேலும் வலுப்படுத்துவேன், சிவப்பு துண்டோடு தவெகவில் செயல்பட விரும்புகிறேன். இந்த தேர்தலில் சாதி தோற்கடிக்கப்பட்டுள்ளதை வியந்து பார்க்கிறேன். தவெக பெரிய இயக்கமாக வளர்வதற்கான விதை விதைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் தவெக சாதியை ஒழித்துக்கட்டியுள்ளது. ஊழலை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை விஜய் தந்துள்ளார்” என்றார்.